இலங்கையில் எரிபொருள் நிரப்ப வரிசையில் காத்திருந்த 2 பேர் மயங்கி விழுந்து பலி


இலங்கையில் எரிபொருள் நிரப்ப  வரிசையில் காத்திருந்த 2 பேர் மயங்கி விழுந்து பலி
x

இலங்கையில் பெட்ரோல் நிலையத்தில் வரிசையில் காத்திருந்த 2 பேர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

கொழும்பு,

பொருளாதார பிரச்சினையில் தள்ளாடிவரும் இலங்கையில் ஆட்சி அதிகார மாற்றம் ஏற்பட்டாலும் மக்களின் அவதி மாறவில்லை. புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தனேயை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நியமித்த நேற்றைய தினமே, பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் காத்திருந்த 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.

அந்நாட்டின் கிழக்கு மாகாணத்தின் கின்னியா நகரில் பெட்ரோல் நிலையத்தில் நெடுநேரம் வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒரு 59 வயது நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

அதேபோல மேற்கு மாகாணத்தின் மத்துகம நகரில் பெட்ரோல் நிலைய வரிசையில் காத்திருந்த ஒரு 70 வயது முதியவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இதுபோன்ற அவல சம்பவங்கள் இலங்கையில் அரங்கேறி வருகின்றன. அந்நாட்டில் 10 நாள் இடைவெளிக்கு பின் இப்போதுதான் எரிபொருள் வினியோகம் தொடங்கி உள்ளது.


Next Story