கச்சா எண்ணெய்க்கான விலை 55 டாலர்களாக இருப்பது பொருத்தமானது - ஈரான்


கச்சா எண்ணெய்க்கான விலை 55 டாலர்களாக இருப்பது பொருத்தமானது - ஈரான்
x

சர்வதேச கச்சா எண்ணெய்க்கான விலை 55 அமெரிக்க டாலர்களாக இருப்பது பொருத்தமான விலையாக இருக்கும் என்று ஈரான் கூறியுள்ளது.

துபாய்

தற்போது அமலில் இருக்கும் உற்பத்தி உச்சவரம்பு நீட்டிக்கப்படுவதை அது வரவேற்கிறது என்று எரிபொருள்துறை அமைச்சர் பிஸான் சங்கான்னே கூறியுள்ளார்.

கடந்த வெள்ளியன்று எண்ணெய் விலை ஐந்து மாதங்களில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. இதற்கு காரணமாக அமெரிக்க பொருளாதார மீட்பும், ரஷ்யா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பில் சேருவதும் சுட்டிக்காட்டப்படுகிறது.

தற்போது எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 49.10 டாலர்களாக உயர்ந்துள்ளது. பல நாடுகள் உற்பத்தி உச்சவரம்பை நீட்டிக்க விரும்புவதாக தெரிகிறது. பல்வேறு உறுப்பு நாடுகளும், எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பில் இடம் பெறாத நாடுகளும் மே 25 ஆம் தேதி சந்திக்கவுள்ளனர். அப்போது இப்போதுள்ள உற்பத்தி உச்சவரம்பை அதிகரிக்கும் முயற்சியை மேற்கொள்ள வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது. 


Next Story