சைப்ரஸ் அமைதி பேச்சு: கடினமான விஷயங்கள் தீர்க்கபடவில்லை - ஐநா பொதுச் செயலர்


சைப்ரஸ் அமைதி பேச்சு: கடினமான விஷயங்கள் தீர்க்கபடவில்லை - ஐநா பொதுச் செயலர்
x
தினத்தந்தி 30 Jun 2017 3:40 PM GMT (Updated: 30 Jun 2017 4:08 PM GMT)

தற்போது நடைபெற்று வரும் சைப்ரஸ் அமைதி பேச்சுவார்த்தையில் இன்னும் கடினமான விஷயங்கள் தீர்க்கப்படவில்லை என்று ஐநா பொதுச் செயலர் குட்டரேஸ் தெரிவித்தார்.

ஜெனீவா

1974 ஆம் ஆண்டு முதல் ‘நேட்டோ’ உறுப்பு நாடுகளான துருக்கியும், கிரீஸ்சும் சைபரஸ் தீவில் யாருடைய ஆட்சி நடைபெற வேண்டும் என்பதில் சண்டையிட்டு வருகின்றன. சைபரஸ் விவகாரம் நேட்டோவில் மட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி இணைவதிலும் தடையாகவுள்ளது.

துருக்கி தனது 30,000 துருப்புகள் கொண்ட படையை வடக்கு சைபரஸில் நிலைநிறுத்தி வைத்திருப்பது சச்சரவிற்கான முக்கிய காரணமாகவுள்ளது. இரு நாட்டு வம்சாவளியினரும் சுழற்சி முறையில் அதிபர் பதவியை வகிக்க வேண்டும் என்ற துருக்கியின் கோரிக்கையும் ஒரு தடையாகவுள்ளது.

எனினும் தற்போது நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை முந்தைய பேச்சு வார்த்தைகளை விட முன்னேற்றமடைந்ததாக காணப்படுகிறது என்றும். இன்றைய இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தையில் நெருக்கம் காட்டுகின்றனர் என்றும் கூறப்படுகிறது. ”பல விஷயங்களில் முன்னேற்றமிருந்தாலும், பேச்சு வார்த்தை மெதுவாகவே நடைபெறுகிறது; பல முக்கிய விஷயங்கள் பேசித் தீர்க்கப்பட வேண்டும்” என்றார் குட்டரேஸ். 

இருவரும் சைப்ரஸை இரு மண்டல கூட்டமைப்பாக ஆக்கும் யோசனைக்கு ஆதரவாக காணப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது. தற்போது கிரேக்கப் பகுதியான தெற்கு சைப்ரஸ் அங்கீகாரம் பெற்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாகவுள்ளது. வடக்கு துருக்கி சைப்ரஸ் அங்கீகாரமற்றுள்ளது.


Next Story