அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் ஜோ பிடென் முன்னிலை


அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் ஜோ பிடென் முன்னிலை
x
தினத்தந்தி 11 March 2020 10:11 PM GMT (Updated: 11 March 2020 10:11 PM GMT)

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் ஜோ பிடென் முன்னிலை பெற்றுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் 3-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியில் ஜனாதிபதி வேட்பாளர்களை தேர்வு செய்ய உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் குடியரசு கட்சியில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

ஜனநாயக கட்சியை பொறுத்தமட்டில் வேட்பாளருக்கான போட்டியில் பலர் களத்தில் இருந்தாலும் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் மற்றும் செனட் சபை எம்.பி. பெர்னி சாண்டர்ஸ் ஆகிய இருவருக்கு இடையே மட்டும் பலப்பரீட்சை நடக்கிறது.

இந்த நிலையில் மிச்சிகன், மிசிசிப்பி மற்றும் மிசூரி ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 3 மாகாணங்களிலும் பெர்னி சாண்டர்சை பின்னுக்கு தள்ளிவிட்டு ஜோ பிடென் வெற்றி வாகை சூடினார்.

இதன் மூலம் ஜோன் பிடென் ஜனநாயக கட்சி வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பிலடெல்பியாவில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய ஜோ பிடென், டிரம்பை வீழ்த்த ஒன்றிணைந்து செயல்படுவோம் என சக போட்டியாளர் பெர்னி சாண்டர்சுக்கு அழைப்பு விடுத்தார்.

Next Story