உலக சுகாதார அமைப்புடனான உறவுகளைத் துண்டித்து கொள்ளப்போகிறோம்- டொனால்டு டிரம்ப்


உலக சுகாதார அமைப்புடனான உறவுகளைத் துண்டித்து கொள்ளப்போகிறோம்- டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 30 May 2020 6:19 AM IST (Updated: 30 May 2020 6:19 AM IST)
t-max-icont-min-icon

உலக சுகாதார அமைப்புடனான அமெரிக்க உறவுகளைத் இன்று முதல் துண்டித்து கொள்ளப்போவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்

கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து போராட உலக சுகாதார அமைப்பு சரியாக செயல் படவில்லை என அமெரிக்க டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவை, எந்தவொரு நாடும் வழங்காத நிதியை உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா ஆண்டுதோறும் சுமார் 450 மில்லியன் டாலர் வழங்கி வருகிறது. ஆனால் நாங்கள் சரியாக நடத்தப்படவில்லை. உலகசுகாதார அமைப்பு கணிசமான முன்னேற்றங்களை எடுக்கா விட்டால் நிதி முடக்கம் நிரந்தரமாகிவிடும் என கூறி இருந்தார்.

இந்த நிலையில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கு ஆரம்ப கட்டத்தில் போதுமானதைச் செய்யத் தவறிவிட்டது. 

நாங்கள் கோரிய மற்றும் பெரிதும் தேவைப்படும் சீர்திருத்தங்களைச் செய்யத் தவறியதால், உலக சுகாதார அமைப்புடனான எங்கள் உறவை நாங்கள் இன்று முதல் துண்டித்து கொள்ளப்போகிறோம்.

கொரோனா வைரஸ் குறித்து சீனாவிடம் இருந்து உலகிற்கு பதில்கள் தேவை. எங்களுக்கு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என கூறினார்.
1 More update

Next Story