30 ஆண்டுகளில் முதல்முறையாக கொரோனாவால் ஆஸ்திரேலியாவில் பொருளாதாரம் மந்தம்


30 ஆண்டுகளில் முதல்முறையாக கொரோனாவால் ஆஸ்திரேலியாவில் பொருளாதாரம் மந்தம்
x
தினத்தந்தி 4 Jun 2020 4:46 AM IST (Updated: 4 Jun 2020 4:46 AM IST)
t-max-icont-min-icon

30 ஆண்டுகளில் முதல்முறையாக கொரோனாவால் ஆஸ்திரேலியாவில் பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது.

கான்பெர்ரா, 

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அந்த நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. 30 ஆண்டுகளில் முதல்முறையாக கொரோனா வைரசாலும், புதர் தீயாலும் அந்த நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையை சந்தித்துள்ளது. ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம், அந்த நாட்டின் பொருளாதாரம், மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.3 சதவீதமாக சுருங்கி விட்டதாக தெரிவித்துள்ளது.

இதுபற்றி அந்த நாட்டின் கருவூலர் ஜோஷ் பிரைடன்பெர்க் கூறும்போது, “ஆஸ்திரேலியா தற்போது பொருளாதார மந்த நிலையை சந்தித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் மார்ச்சில் சுருங்கிப்போய்விட்டது. ஜூனுடன் முடியும் காலாண்டிலும் இது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்” என குறிப்பிட்டார்.

கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி அதன் முக்கிய வட்டிவீதத்தை 0.25 சதவீதம் குறைத்தது. மேலும், வரம்பற்ற பத்திர கொள்முதல் திட்டத்தையும் அறிவித்தது.

Next Story