கராச்சி தாக்குதலுக்கு பின்னணியில் இந்தியா உள்ளது- இம்ரான் கான் சொல்கிறார்
கராச்சி தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இஸ்லமாபாத்,
கராச்சி பங்குச்சந்தை கட்டிடத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி முகம்மது குரோஷி குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானும் அதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளர்.
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் உரையாற்றிய இம்ரான்கான் கூறுகையில், “ கராச்சி தாக்குதலுக்கு பின்னால் இருப்பது இந்தியாதான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. பங்குச்சந்தை கட்டிடத்திற்குள் நுழைவதற்கு முன்பாகவே 4 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இது மிகப்பெரிய வெற்றி” என்றார்.
நேற்று முன் தினம், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகம்மது குரோஷி, “கராச்சி பங்குச்சந்தை தாக்குதலுக்கு இந்தியாவின் ஸ்லீப்பர் செல்ஸ்களே காரணம்” என்று கூறியிருந்தது நினைவிருக்கலாம். முன்னதாக கடந்த திங்கள் கிழமை பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை கட்டிடத்திற்குள் ஆயுதங்களுடன் நுழைய முயன்ற பயங்கரவாதிகள் அங்கு கடும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்ட்டனர். பயங்கரவாதிகள் 4 பேரையும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

Related Tags :
Next Story