உலக செய்திகள்

அமெரிக்க அரசியல் தலைவர்கள் 11 பேர் மீது சீனா பொருளாதார தடை + "||" + China imposes sanctions on US senators over Hong Kong

அமெரிக்க அரசியல் தலைவர்கள் 11 பேர் மீது சீனா பொருளாதார தடை

அமெரிக்க அரசியல் தலைவர்கள் 11 பேர் மீது சீனா பொருளாதார தடை
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான மோதல் நீடிக்கிறது. இரு நாடுகளின் உறவும் மிகவும் மோசமடைந்துள்ளது.
பீஜிங், 

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான மோதல் நீடிக்கிறது. இரு நாடுகளின் உறவும் மிகவும் மோசமடைந்துள்ளது. இதனிடையே ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்தியதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் உள்பட சீனா மற்றும் ஹாங்காங் அதிகாரிகள் 11 பேர் மீது அமெரிக்கா கடந்த வாரம் பொருளாதார தடை விதித்தது.

இந்த நிலையில் சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக கூறி அமெரிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் தலைவர்கள் 11 பேர் மீது சீனா பொருளாதார தடையை அறிவித்துள்ளது.

இந்த 11 பேரில் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களான மார்கோ ரூபியோ மற்றும் டெட் குரூஸ் ஆகிய இருவரும் அடங்குவர். இவர்கள் இருவரும் சீனாவுக்குள் நுழைவதற்கு அந்த நாடு ஏற்கனவே தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பொருளாதார தடை குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில், “பட்டியலிடப்பட்டுள்ள இந்த 11 பேரும் ஹாங்காங் தொடர்பான பிரச்சினையில் மோசமாக செயல்பட்டவர்கள் ஆவர். சீனா தனது இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு எதிரான செயல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது” எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. 15 கோடி விரைவான கொரோனா சோதனை கருவிகள் விநியோகிக்கும் திட்டம் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க அரசு அடுத்த சில வாரங்களில் 15 கோடி விரைவான, கொரோனா வைரஸ் சோதனைக் கருவிகளை விநியோகிக்கும் என்று அறிவித்து உள்ளார்.
2. சீனாவில் 21 பேருக்கு கொரோனா: வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள்
சீனாவில் வெளியிடங்களில் இருந்து வந்த 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. உலகளாவில் தடுப்பூசிக்கு முன் கொரோனாஇறப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும் - உலக சுகாதார அமைப்பு
உலகளாவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு முன் கொரோனா பாதிப்பு இறப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டக்கூடும் என உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது..!
4. கொரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தி திறன்: அடுத்த ஆண்டு 100 கோடி அளவுகளில் முதலிடம் பெறும் -சீனா பெருமை
கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கான ஆண்டு உற்பத்தி திறன் அடுத்த ஆண்டு 100 கோடி அளவுகளில் முதலிடம் பெறும் என்று சீன சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
5. உய்குர் இன மக்களை, சீன மயமாக்க ரகசிய முகாம் மற்றும் சிறைகளை அமைத்துள்ளது- தகவல்கள்
உய்குர் இன மக்களை, சீன மயமாக்க, ஆவணப்படுத்தப்பட்ட அதிகமாக முகாம் மற்றும் சிறைகளை சீனா ரகசியமாக வைத்துள்ளதாக அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கிழக்கு துர்கிஸ்தான் தேசிய விழிப்புணர்வு இயக்கம் கூறியுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...