ஜோ பைடனுக்கு ஒருவாரத்திற்கு பிறகு வாழ்த்து தெரிவித்த சீனா..!


ஜோ பைடனுக்கு ஒருவாரத்திற்கு பிறகு வாழ்த்து தெரிவித்த சீனா..!
x
தினத்தந்தி 13 Nov 2020 10:21 AM GMT (Updated: 13 Nov 2020 10:55 AM GMT)

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று ஒருவாரம் ஆகியுள்ள நிலையில் தற்போதுதான் சீனா, ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

ஆனால், சீனா, ரஷியா, மெக்சிகோ போன்ற சில நாடுகள் வாழ்த்து தெரிவிக்காததுடன், எந்த கருத்தும் கூறவில்லை. டிரம்ப் நிர்வாகத்தின்கீழ், அமெரிக்க-சீன உறவு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இருப்பினும், டிரம்பின் தோல்விக்கு மகிழ்ச்சி அடையும் விதத்தில் கூட சீனா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் ஒரு வழியாக இன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், அமெரிக்க மக்களின் தேர்வை நாங்கள் மதிக்கிறோம், ஜோ பைடன் மற்றும் ஹாரிஸுக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார். 

Next Story