தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் செல்போன் எண்கள் முடக்கம்-பாகிஸ்தான் அறிவிப்பு


தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் செல்போன் எண்கள் முடக்கம்-பாகிஸ்தான் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Jun 2021 1:48 PM IST (Updated: 12 Jun 2021 1:48 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் செல்போன் எண்கள் முடக்கப்படும் என அம்மாகாண சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இஸ்லாமாபாத்

கொரோனா பரவலை தடுக்க ஒரே வழி தடுப்பூசியே என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துவரும் சூழலில், ஒருசிலர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள தயங்குகின்றனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப்பில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டுவரும் நிலையில் முதல் டோஸை போட்டுக்கொண்ட சுமார் 3 லட்சம் பேர் இரண்டாம் டோஸை போட்டுக்கொள்ள முன் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வராதவர்களின் செல்போன் எண்கள் முடக்கப்படும் என பஞ்சாப் மாகாண அரசு தடாலடியாக அறிவித்துள்ளது.
1 More update

Next Story