ஆப்கானிஸ்தானுக்கு மருந்து பொருள்களை அனுப்பி இந்தியா உதவி


ஆப்கானிஸ்தானுக்கு மருந்து பொருள்களை அனுப்பி இந்தியா உதவி
x
தினத்தந்தி 11 Dec 2021 11:46 PM GMT (Updated: 11 Dec 2021 11:46 PM GMT)

ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு மருந்து பொருள்களை அனுப்பி இந்தியா உதவி செய்துள்ளது.காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் வசம் ஆட்சி அதிகாரம் சென்ற பின்பு முதன்முறையாக மனிதாபிமான அடிப்படையிலான உதவியாக 1.6 மெட்ரிக் டன் உயிா் காக்கும் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பொருள்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

கொரோனா பரவ கூடிய கடினமான சூழலில் ஆப்கன் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக இந்த உதவியை இந்தியா செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் இருந்து டெல்லிக்கு 10 இந்தியா்கள் மற்றும் 94 ஆப்கானிஸ்தானியா்கள் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.  அந்த விமானத்திலேயே இந்த மருத்துவ பொருள்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.  இதுதவிர, ஆப்கானிஸ்தானுக்கு 50 ஆயிரம் டன் கோதுமை மற்றும் மருந்துகள் அனுப்பப்படும் என்று இந்தியா முன்பே தெரிவித்து இருந்தது.


Next Story