பிரேசிலில் இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழை: ஏழு பேர் பலி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 Dec 2021 4:47 AM GMT (Updated: 14 Dec 2021 4:47 AM GMT)

பிரேசிலில் கனமழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரியோ டி ஜெனீரோ,

பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள பாகியா மாகாணத்தில் பலத்த கனமழை பெய்தது. இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக அங்குள்ள 30-க்கும் மேற்பட்ட நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. 

கனமழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 150-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சமடைந்தனர். மேலும் மீட்புப்பணிகளில் 200க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

Next Story