இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் 78,610 பேருக்கு கொரோனா பாதிப்பு...!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 78,610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில்புதிதாக 78,610 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,10,286 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 165 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 46 ஆயிரத்து 791 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 96 லட்சத்து 17 ஆயிரத்து 941 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 9,70,636 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஒமைக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாடு லண்டனில் "தனியான விகிதத்தில்" பரவியுள்ளது. இந்த தொற்று தற்போது சுமார் 40% நோய்த்தொற்றுகளுக்கு காரணமாக உள்ளது. இரட்டை தடுப்பூசி போடப்பட்டவர்கள் கூட இன்னும் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்பதால், பூஸ்டர் டோஸ் தடுப்புசிகளை எடுக்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story