‘புத்தாண்டு கொண்டாட்டத்தை ரத்து செய்யுங்கள்’ :உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்


‘புத்தாண்டு கொண்டாட்டத்தை ரத்து செய்யுங்கள்’ :உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்
x
தினத்தந்தி 21 Dec 2021 11:36 PM GMT (Updated: 21 Dec 2021 11:36 PM GMT)

மக்கள் விடுமுறைக்கு திட்டமிட்டு வருகிற தருணத்தில் அவற்றை ரத்து செய்து விடுமாறு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கேட்டுக்கொண்டார்

ஜெனீவா, 

உலக நாடுகள் கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர போராடி வருகின்றன. இன்னொரு புறம் ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி உலகமெங்கும் மக்கள் விடுமுறைக்கு திட்டமிட்டு வருகிற தருணத்தில் அவற்றை ரத்து செய்து விடுமாறு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கேட்டுக்கொண்டார். இதையொட்டி சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “வாழ்க்கையே ரத்தாகி விடுவதைவிட ஒரு நிகழ்வு ரத்து செய்யப்படுவது சிறந்தது. இப்போது கொண்டாடி பின்னர் வருத்தப்படுவதை விட, இப்போது (கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தை) ரத்து செய்துவிட்டு பின்னர் கொண்டாடலாம். புத்தாண்டில் (2022-ம் ஆண்டு) கொரோனா பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டு வருவோம்” என கூறினார்.

“டெல்டாவை விட ஒமைக்ரான் குறிப்பிடத்தக்க அளவில் கணிசமாக பரவுகிறது என்பதற்கு சான்றுகள் உள்ளன. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மற்றும் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மீண்டும் தொற்றுக்கு ஆளாகலாம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Next Story