விரைவில் அறிமுகம் ...! கத்திக்குத்தில் இருந்தும் உங்களை காக்கும் டி-ஷர்ட்..!


விரைவில் அறிமுகம் ...! கத்திக்குத்தில் இருந்தும் உங்களை காக்கும் டி-ஷர்ட்..!
x
தினத்தந்தி 22 Dec 2021 7:20 AM GMT (Updated: 22 Dec 2021 7:20 AM GMT)

கத்திக்குத்து தாக்குதலில் இருந்து தப்பிக்கும் வகையிலான டி-ஷர்டுகளை இங்கிலாந்தை சேர்ந்த ஆயுத உற்பத்தி நிறுவனமான பி.பி,எஸ்.எஸ். தயாரித்துள்ளது.

லண்டன், 

இங்கிலாந்து ஆயுத நிறுவனமான பி.பி,எஸ்.எஸ்.  ஒரு தனித்துவமான டி-ஷர்ட்டை உருவாக்கியுள்ளது, இது கூர்மையான கத்திகளைக் கொண்டு தாக்குதல்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும் என்று தெரிவித்துள்ளது. பிபிஎஸ்எஸ் குழுவின் இந்த டி-ஷர்ட், முதன்மையாக உடல் பாதுகாப்பு கவசமாக கூறப்படுகிறது. இந்த சிறப்பு டி-ஷர்ட்டை கார்பன் பைபரிலிருந்து தயாரிக்கப்படுகிறது, இது பருத்தி இழையை விட மிகவும் வலிமையானது.

பொதுவாக, கவசம் அல்லது துப்பாக்கி நிறுவனங்கள் சாதாரண குடிமக்களுக்கு பாதுகாப்பு அங்கிகளை தயாரிப்பதில்லை. இருப்பினும், இந்த சிறப்பு டி-ஷர்ட் உங்களை கத்தி குத்து தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவில் அறிமுகமாக உள்ள இந்த டி-ஷர்ட்டின் விலை ரூ.16,000 முதல் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முகநூல் பதிவில் வெளியிடப்பட்ட வீடியோவில், அந்த டி-ஷர்டை அணிந்த ஒரு நபர் கூர்மையான கத்தியால் தாக்கப்பட்டார். தாக்குதலுக்குப் பிறகு, டி-ஷர்ட் அகற்றப்பட்டது. அந்த  நபரின் உடலில் ஒரு கீறல் கூட காணப்படவில்லை. டீ-சர்ட் மிகவும் தடிமனாக இருந்தது, கூர்மையான ஆயுதம் கூட உடலின் உட்புறத்தை சேதப்படுத்த முடியாது என்று அதில் பதிவிடப்பட்டிருந்தது.  


Next Story