ஒமைக்ரான் பாதிப்பு; உலகம் முழுவதும் 2,500 விமானங்கள் ரத்து

ஒமைக்ரான் பாதிப்புகளை முன்னிட்டு உலகம் முழுவதும் 2,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டும், 5,200 விமானங்கள் காலதாமதத்துடனும் இயக்கப்பட்டன.
வாஷிங்டன்,
உலகம் முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்புகள் பரவி வருகின்றன. 60க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் குறைந்தன.
உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் தினத்தில் (சனிக்கிழமை) 6 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இவற்றில் அமெரிக்காவில் 2,850 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதேபோன்று கடந்த ஞாயிற்று கிழமையும் அமெரிக்காவில் 2,513 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
விமான பணியாளர்கள் பலருக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்றும் (செவ்வாய் கிழமை) இதேபோன்ற நிலை நீடித்துள்ளது. ஒமைக்ரான் பாதிப்புகளை கவனத்தில் கொண்டு உலகம் முழுவதும் 2,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஏறக்குறைய, 5,200 விமானங்கள் காலதாமதத்துடன் இயக்கப்பட்டன.
Related Tags :
Next Story