உலக செய்திகள்

அமெரிக்காவில் இதுவரை 50.5 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தகவல் + "||" + About 50. 5 crore doses of corona vaccine administered in US so far

அமெரிக்காவில் இதுவரை 50.5 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தகவல்

அமெரிக்காவில் இதுவரை 50.5 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 6.7 கோடி பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் மாடர்னா, பைசர்/பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 50,50,13,980 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதில் 24,28,13,374 பேர் இதுவரை முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், 20,54,20,745 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் பைசர், மாடர்னா ஆகிய நிறுவனங்களின் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை சுமார் 6.7 கோடி பேர் இதுவரை செலுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு ரத்து - சோமாலியாவுக்கு மீண்டும் படைகளை அனுப்ப ஜோ பைடன் உத்தரவு
சோமாலியாவுக்கு மீண்டும் படைகளை அனுப்ப ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
2. அமெரிக்கா: மதவழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? - பகீர் பின்னணி
அமெரிக்காவில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான சர்ச்சில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
3. கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.250ஆக குறைப்பு..!!
கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.840லிருந்து ரூ.250ஆக குறைக்கப்பட்டுள்ளது.
4. "ரணகளத்துலயும் ஒரு கிளு கிளுப்பு" 69 வயதில் தந்தையாகும் ரஷிய அதிபர் புதின்...!
ரஷிய அதிபர் புதினின் 38 வயது ரகசிய காதலி அலினா கபேவா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
5. அமெரிக்காவில் சர்ச் ஒன்றில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி 4 பேர் காயம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சர்ச் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.