2022 புத்தாண்டை வரவேற்றது ஆஸ்திரேலியா - இரவை பகலாக்கிய வானவேடிக்கைகள்...


2022 புத்தாண்டை வரவேற்றது ஆஸ்திரேலியா - இரவை பகலாக்கிய வானவேடிக்கைகள்...
x
தினத்தந்தி 31 Dec 2021 1:28 PM GMT (Updated: 31 Dec 2021 1:29 PM GMT)

இரவை பகலாக்கும் வானவேடிக்கைகள் மற்றும் வண்ணமயமான லேசர் ஒளிக்கற்றைகளைக் கொண்டு புத்தாண்டை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது.

சிட்னி,

உலகம் முழுவதும் இன்று இரவு 12 மணிக்கு புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டாலும், ஒவ்வொரு நாட்டின் நேரக்கணக்கின்படி புத்தாண்டு பிறக்கும் நேரங்கள் மாறுபடுகின்றன. அந்த வகையில் உலகின் முதல் நாடாக நியூசிலாந்து, 2022 ஆம் ஆண்டை வரவேற்றது. இதனை அந்நாட்டு மக்கள் வண்ணமயமான வானவேடிக்கைகள் மூலம் உற்சாகமாக வரவேற்று கொண்டாடினர்.

அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் தற்போது 2022 புத்தாண்டு உதயமாகியிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியில் இரவை பகலாக்கும் வானவேடிக்கைகள் மற்றும் வண்ணமயமான லேசர் ஒளிக்கற்றைகளைக் கொண்டு புத்தாண்டை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது. சிட்னியில் உள்ள புகழ்பெற்ற ஒபேரா மாளிகை மின்விளக்குகளால் ஒளிர்ந்தது. 

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் எளிமையான முறையில் இருந்தன. இந்த ஆண்டு ஒமைக்ரான் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்து வந்தாலும், புத்தாண்டு கொண்டாட்டங்கள் வழக்கம் போல உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகின்றன. 

Next Story