5 முதல் 11 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பிரேசில் அனுமதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 Jan 2022 10:20 AM GMT (Updated: 2022-01-06T15:50:48+05:30)

பிரேசில் அரசு 5-11 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்துள்ளது.

பிரேசிலியா,

ஒமைக்ரான் மாறுபாட்டின் வருகையால் பிரேசிலில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில், பிரேசில் அரசு 5 முதல் 11 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்துள்ளது. பைசர்-பயோ என்டெக் தடுப்பூசி 5 முதல் 11 வயதுடையவர்களுக்கு பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என பிரேசில் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட விரும்பும் பெற்றோர்கள் சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என கேட்டுக்கொண்டுள்ளது.

பிரேசிலின் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளில் 24 மணி நேரத்தில் 18,759 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அக்டோபர் 5- க்குப் பிறகு அதிக எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story