உலக செய்திகள்

சீனாவில் கொரோனா பரவல்; 3 நகரங்களில் முழு ஊரடங்கு + "||" + Corona spread Full lockdown in 3 cities in China

சீனாவில் கொரோனா பரவல்; 3 நகரங்களில் முழு ஊரடங்கு

சீனாவில் கொரோனா பரவல்; 3 நகரங்களில் முழு ஊரடங்கு
கொரோனா பரவல் காரணமாக சீனாவில் இதுவரை 3 நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பீஜிங்,

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில், சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

இந்த சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியது. கடந்த ஒரிரு மாதங்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவின் உள்ளூர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் அங்கு கொரோனா பரவியதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சீனாவின் ஷியான் மற்றும் யூசோவ் ஆகிய 2 நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 3-வதாக அன்யாங் என்ற நகரத்திலும் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சினாவில் வரும் பிப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், தற்போது அங்கு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதனை விரைவில் கட்டுப்படுத்தி நாட்டின் பிற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் சீன அரசு தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவல் அதிகரிப்பு: வடகொரியாவில் மருந்து வினியோகத்தில் ஈடுபட ராணுவத்துக்கு கிம் ஜாங் உத்தரவு
வடகொரியாவில் நேற்று மேலும் 8 பேர்பலியானார்கள். அதற்கு கொரோனா காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
2. அருணாசல பிரதேச எல்லை அருகே உள்கட்டமைப்பு வசதிகளை சீனா மேம்படுத்துகிறது ; ராணுவம் தகவல்
அருணாசல பிரதேச எல்லை அருகே உள்கட்டமைப்பு வசதிகளை சீனா மேம்படுத்தி வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
3. ஆஸ்திரேலிய கடல் எல்லையில் சீனாவின் உளவு கப்பல் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டு
சீனாவின் உளவு கப்பல் தங்கள் நாட்டின் கடல் எல்லை அருகே அத்துமீறி நுழைந்தது கண்டிக்கத்தக்கது என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
4. ‘கொரோனாவுக்கு எதிரான யுக்தியை மாற்றுங்கள்’ - சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு கண்டிப்பு
கொரோனாவுக்கு எதிரான யுக்தியை மாற்றுங்கள் என்று சீனாவை உலக சுகாதார அமைப்பு கண்டித்துள்ளது.
5. எல்லை பிரச்சினையை நிரந்தரமாக வைத்திருப்பதே சீனாவின் நோக்கம் - ராணுவ தளபதி மனோஜ் பாண்டே குற்றச்சாட்டு
எல்லை பிரச்சினையை நிரந்தரமாக வைத்திருப்பதே சீனாவின் நோக்கம் என்று ராணுவ தளபதி மனோஜ் பாண்டே குற்றஞ்சாட்டியுள்ளார்.