பிரேசிலில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலி

பிரேசிலில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர்.
பிரேசிலா,
பிரேசில் நாட்டின் சயோ பலோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 5 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சயோ பலோவில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த இயற்கை பேரிடரில் சிக்கி 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகியுள்ளதால் அவர்களை தேடும் பணிகள் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story