அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு; மாணவர் உயிரிழப்பு


அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு; மாணவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 2 Feb 2022 12:17 AM GMT (Updated: 2 Feb 2022 12:17 AM GMT)

அமெரிக்காவில் பள்ளி கூடமொன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் மாணவர் உயிரிழந்து உள்ளார்.வாஷிங்டன்,


அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் அதிகளவில் இருந்தபோதும், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன.  இந்நிலையில், மின்னசோட்டா மாகாணத்தில் பள்ளி கூடமொன்றின் அருகே 2 மாணவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு கீழே கிடந்துள்ளனர்.  

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  எனினும் அவர்களில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.  காயமடைந்த மற்றொரு மாணவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.  இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதற்கான காரணம் மற்றும் மாணவர்களின் வயது விவரம் உள்ளிட்டவற்றை போலீசார் வெளியிடவில்லை.  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story