சிக்னலை மதிக்காமல் சென்ற முன்னாள் ரக்பி விளையாட்டு வீரர்: காரை மறித்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

அமெரிக்க முன்னாள் ரக்பி விளையாட்டு வீரரான கிரெக் ராபின்சன் போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சென்றுள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் முன்னாள் ரக்பி விளையாட்டு வீரர் கிரெக் ராபின்சன். இவர் கடந்த திங்களன்று அங்குள்ள கிழக்கு பேயூ ரோட்டில் காரில் வந்தபோது போக்குவரத்து சிக்னலில் நிற்காமல் சென்றுள்ளார்.
இதனால், அவரது காரை மறித்த போலீஸ் அதிகாரிகள் காரை சோதனை செய்தனர். அப்போது அதில் கோகோயின், கிராக் கோகோயின், ஆக்ஸிகோடோன், ஹைட்ரோகோடோன், சானாக்ஸ் மற்றும் மரிஜுவானா போன்ற போதைப்பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனை தொடர்ந்து கிரெக் ராபின்சனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை செய்ததில், அவரிடம் ரூ.90 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் இருப்பதும், போதைபோருள் கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து ராபின்சனிடம் இருந்த போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் சிறிய அளவிலான பணத்தையும் கைப்பற்றினர்.
இந்த சம்பவம் தொடர்பாக ராபின்சனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story