அமெரிக்காவில் 11 மாகாணங்களில் முகக்கவசம் கட்டாயம் இல்லை என அறிவிப்பு

அமெரிக்காவில் 11 மாகாணங்களில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,
கொரோனா தொற்று பரவலை தடுக்க உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தல்படி, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகள் உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வருகின்றன. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பொது இடங்களில் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அந்நதந்த நாடுகளின் அரசாங்கங்கள் உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. கொரோனா தொற்று பரவல் விகிதத்தை பொறுத்து இந்த உத்தரவுகளை தீவிரப்படுத்தவோ அல்லது தளர்த்தவோ நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த வகையில் அமெரிக்காவில் தற்போது 11 மாகாணங்களில் முகக்கவசம் கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா, கனெக்டிகட், டெலாவேர், இலினாய்ஸ், மசாசூசெட்ஸ், நிவேடா, நியூஜெர்சி, நியூயார்க், வாஷிங்டன், ஒரீகன், ரோட் ஐலேண்ட் ஆகிய 11 மாகாணங்களில் கட்டாய முகக்கவச உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது.
அங்கு கணிசமான அளவில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால், முகக்கவசம் அணிவதை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாகாண அரசுகள் தெரிவித்துள்ளன. அதே சமயம் மருத்துவமனைகள், உள் அரங்குகள், பள்ளி வளாகங்களில் மேலும் சில நாட்களுக்கு முகக்கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






