விடுகதை அல்ல: 24 வயது பெண்ணுக்கு 22 குழந்தைகள்...? எல்லாம் 2 வயது அது எப்படி...?


விடுகதை அல்ல: 24 வயது பெண்ணுக்கு 22 குழந்தைகள்...?  எல்லாம் 2 வயது அது எப்படி...?
x
தினத்தந்தி 26 March 2022 11:10 AM GMT (Updated: 26 March 2022 11:28 AM GMT)

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 22 குழந்தைகள் உள்ளன. அத்தனை குழந்தையும் 2 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடையவை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா ஓஸ்டர்க். 24 வயதான இந்தப் பெண்ணுக்கு இப்போது 22 குழந்தைகள் உள்ளன. கிறிஸ்டினாவின் கணவர் பெயர் காலிப். இவர்கள் இருவரும் வாடகை தாய் முறையில் 22 குழந்தைகளை பெற்றுள்ளனர். இதற்காக அவர்கள் 195,000 டாலர்களை( இந்திய மதிப்பில் ரூ1.50 கோடி)  செலவு செய்துள்ளனர்.

கிறிஸ்டினாவின் இந்த பெரிய குடும்பம் குறித்த பதிவு  இன்ஸ்டாகிராம் தளத்தில் வைரல் ஆனது. இவர்களுக்கு எப்படி இத்தனை குழந்தைகள் என்பதை நெட்டிசன்களால் புரிந்து கொள்ள இயலவில்லை. கிறிஸ்டினாவின் 22 குழந்தைகள் மற்றும் காலிப், அவரது முன்னாள் மனைவி மூலமாக பெற்ற 6 வயது மகள் உள்பட தற்போது ஒரே வீட்டில் 23 குழந்தைகள் வசித்து வருகின்றன.

இதுகுறித்து கிறிஸ்டினா கூறுகையில், நான் எப்போதும் குழந்தைகளுடனே இருக்கிறேன். ஒரு தாய் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால், ஒரேயொரு வேறுபாடு என்ன என்றால், குழந்தைகளின் எண்ணிக்கை தான்.Next Story