சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 27 March 2022 3:32 PM GMT (Updated: 27 March 2022 3:32 PM GMT)

சீனாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நகரின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பெய்ஜிங்,

சீனாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து அங்கு பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஒரே ஒரு நோயாளி கண்டறியப்பட்டாலும் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் அப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் தனிமை  முகாம்களுக்கு அனுப்பி கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தியது சீன அரசு .

சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒமைக்கரான் பரவல் காரணமாக தொற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து கடும் கட்டுப்பாடுகளை சீனா அமல்படுத்தி வருகிறது. அதேபோல், ஆங்காங்கே தீவிர ஊரடங்குகளையும்ம் சீனா அமல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் இன்று 4,500 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது. மேலும் ஷாங்காயில் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அங்குள்ள முக்கிய பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நகரின் பரந்த கிழக்குப்பகுதியான புக்சியில் நாளை முதல் ஏப்ரல் 1 முதல் ஐந்து நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மேலும், ஊரடங்கின் போது, பேருந்துகள், டாக்சிகள் மற்றும் நகரின் விரிவான சுரங்கப்பாதை அனைத்தும் மூடப்படும் என்று அரசு கூறியுள்ளது.


Next Story