தென்கொரியாவில் மேலும் 2.24 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு..!!


Image Courtesy: AFP
x
Image Courtesy: AFP
தினத்தந்தி 7 April 2022 5:24 PM GMT (Updated: 7 April 2022 5:24 PM GMT)

தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,24,761 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சியோல், 

உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா பாதிப்பினை தொடர்ந்து, ஓமைக்ரான் எனும் புதிய வேரியண்ட் பரவி வருகிறது. இது பல நாடுகளில் மூன்றாவது அலை, நான்காவது அலைக்கு காரணமாகி உள்ளது. 

இந்த சூழலில் தென்கொரியாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்த நிலையில், அதன் பின்னர் பாதிப்பு சற்று குறைந்து வந்தது. 

இந்த நிலையில் தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரத்து 761 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அந்த நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 1.47 கோடியை தாண்டியது. அதன்படி அங்கு இதுவரையில் 1 கோடியே 47 லட்சத்து 78 ஆயிரத்து 405 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அதே போல் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 348 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 18 ஆயிரத்து 381 ஆக அதிகரித்தது.

Next Story