நான் மர்மமான முறையில் உயிரிழந்தால்? - எலான் மஸ்க் பரபரப்பு டுவீட்!


நான் மர்மமான முறையில் உயிரிழந்தால்? - எலான் மஸ்க் பரபரப்பு டுவீட்!
x
தினத்தந்தி 9 May 2022 4:37 AM GMT (Updated: 9 May 2022 4:37 AM GMT)

எலான் மஸ்க்கின் உயிருக்கு ரஷியாவிடம் இருந்து அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழும்பியுள்ளது.

வாஷிங்டன்,

டுவிட்டரின் உரிமையாளராக மாற இருக்கும் எலான் மஸ்க்கின் உயிருக்கு ரஷியாவிடம் இருந்து அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழும்பியுள்ளது.

உக்ரைனுக்கு உதவியதற்காக எலான் மஸ்க்கிற்கு ரஷியாவிடம் இருந்து அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழும்பியுள்ளது.

கடந்த பிப்ரவரியில், உக்ரைனில் எலான் மஸ்க் உதவியுடன் அவருக்கு சொந்தமான ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை செயல்படுத்தப்பட்டது. இதே போன்ற பல உதவிகளை அவர் உக்ரைனுக்கு செய்தார்.

இந்நிலையில், "நான் மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்தால், இதை பற்றி அறிவது நன்றாக உள்ளதல்லவா..” என்று எலான் மஸ்க் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவருடைய இந்த திடீர் டுவிட்டர் பதிவு அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
ஆனால் அதற்கு முன்னர், அவர் மற்றொரு பதிவையும் பகிர்ந்துள்ளார். அதில், “உக்ரைனில் உள்ள பாசிச படைகளுக்கு இராணுவத் தொலைத்தொடர்பு சாதனங்களை வழங்குவதில் எலோன் மஸ்க் ஈடுபட்டுள்ளார். நீங்கள் எவ்வளவு முட்டாள்தனமாக விளையாடினாலும் சரி, இதற்கு நீங்கள் பொறுப்பேற்கப்படுவீர்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த பதிவில், இந்த உபகரணங்கள் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகனால் உக்ரைனுக்கு வழங்கப்பட்டன என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பதிவு உக்ரைனுக்கு உதவியதற்காக, ரஷியாவால் எலான் மஸ்க்கிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறதா என்ற சந்தேகத்தை எழும்பியுள்ளது.இதனை தொடர்ந்தே எலான் மஸ்க், தான் மர்மமான முறையில் உயிரிழக்கலாம் என்று பதிவிட்டு, சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளார்.

Next Story