அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து 3 பேர் பலி


அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து 3 பேர் பலி
x

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று முன்தினம் சிறிய ரக விமானம் ஒன்று சென்றது. அதில் 3 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அங்குள்ள பிக் பியர் என்ற குடியிருப்பு பகுதி அருகே சென்றபோது அந்த விமானம் திடீரென விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதனால் மீட்பு படையினர் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது அந்த விமானம் பிக் பியர் பகுதியில் உள்ள சாலை அருகே கீழே விழுந்து கிடந்ததை கண்டுபிடித்தனர். மேலும் இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 3 பேரும் உடல் சிதறி பலியானது தெரிய வந்தது. இந்த விபத்துக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. எனவே இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட அங்குள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மலைப்பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்து விமானி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story