இஸ்ரேல் படையால் பாலஸ்தீனர்கள் 3 பேர் சுட்டுக்கொலை


இஸ்ரேல் படையால் பாலஸ்தீனர்கள் 3 பேர் சுட்டுக்கொலை
x

கோப்புப்படம்

இஸ்ரேல் படையால் பாலஸ்தீனர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜெருசலேம்,

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. சர்ச்சைக்குரிய இடங்களான மேற்கு கரை பகுதி மற்றும் ஜெருசலேம் நகரம் யாருக்கு சொந்தம் என்பதில் இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான மோதல் தொடர்ந்து வருகிறது.

இந்த விவகாரத்தில் இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலாஸ்தீனத்தின் காசா நகரை சேர்ந்த போராளிகள் குழுவுக்கும் இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு பயங்கர மோதல் வெடித்தது. காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்தாக்குதல்களில் 44 பேர் கொல்லப்பட்டனர். 3 நாட்களாக தொடர்ந்து சண்டை நீடித்து வந்த நிலையில் எகிப்தின் மத்தியஸ்தத்தில் நேற்று முன்தினம் இருதரப்பும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன.

இந்த நிலையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கரை பகுதியில் உள்ள நாப்லஸ் நகரில் பாலஸ்தீன போராளிகளை கைது செய்வதாக கூறி நேற்று அங்கு இஸ்ரேல் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாலஸ்தீனர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். 40-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே இஸ்ரேல் படையினரால் பாலஸ்தீனர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பதற்றத்ததை அதிகரித்துள்ளது.


Next Story