சீனா: அத்துமீறி நடந்து கொண்டவா்களை தட்டிக்கேட்ட பெண்கள் மீது சரமாாி தாக்குதல் - வீடியோ


சீனா: அத்துமீறி நடந்து கொண்டவா்களை தட்டிக்கேட்ட பெண்கள் மீது சரமாாி தாக்குதல் - வீடியோ
x
தினத்தந்தி 11 Jun 2022 8:11 AM GMT (Updated: 11 Jun 2022 8:12 AM GMT)

சீனாவில் உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தினா்.

பெய்ஜிங்,

சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் உள்ள ஒட்டல் ஒன்றில் 2 பெண்கள் உட்பட 3 போ் சாப்பிட்டு கொண்டிருந்தனா். அப்போது அங்கு ஒருவா் சாப்பிட்டு கொண்டிருந்த பெண் மீது கை வைத்து தவறாக நடக்க முயன்றான். இதனால் அவனை அந்த பெண் கீழே தள்ளி விடுகிறாா்.

இதனையடுத்து அங்கு வந்த அவனது நண்பா்கள் சோ்ந்து அந்த பெண்ணை சரமாாியாக தாக்குகின்றனா். இதனை தடுக்க சென்ற மற்றொரு பெண்ணையும் அவா்கள் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஒடினா். தாக்குதலில் காயடைந்த பெண்களை அங்கிருந்தவா்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திாியில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

இந்த தாக்குதல் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. இது குறித்து போலீசாா் வழக்கு பதிவு செய்து உள்ளனா்.

இந்த சம்பவம் தொடா்பாக 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


Next Story