இங்கிலாந்தில் கலாசார திருவிழா: போதைப்பொருளுடன் 85 பேர் கைது


இங்கிலாந்தில் கலாசார திருவிழா: போதைப்பொருளுடன் 85 பேர் கைது
x

கோப்புப்படம்

தினத்தந்தி 28 Aug 2023 8:47 PM GMT (Updated: 29 Aug 2023 6:49 AM GMT)

இங்கிலாந்தில் கலாசார திருவிழாவில் போதைப்பொருளுடன் 85 பேர் கைது செய்யப்பட்டனர்.

லண்டன்,

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நாட்டிங் ஹில் கலாசார திருவிழா ஆண்டுேதாறும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இது கரீபிய மக்களின் கலாசாரம், கலைகள் மற்றும் பாரம்பரியத்தை கவுரவிப்பதற்காக ஆகஸ்டு மாதத்தின் கடைசி வாரத்தில் நடைபெறும். லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த திருவிழா கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்தது.

இந்தநிலையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்களுடன் இந்த திருவிழா கோலாகலமாக துவங்கியது. முதல் நாளான நேற்று கண்கவர் உடைகளை அணிந்து உற்சாகமாக நடனமாடினர். அதேசமயம் இந்த விழாவில் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை பலர் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அதன்பேரில் போதைப்பொருள் வைத்திருந்த 85 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story