வரிப்புலியுடன் வம்பு சண்டைக்கு சென்ற நாய்... பரபரப்பு வீடியோ வெளியீடு


வரிப்புலியுடன் வம்பு சண்டைக்கு சென்ற நாய்... பரபரப்பு வீடியோ வெளியீடு
x

வரிப்புலியுடன் நாய் ஒன்று வம்பு சண்டைக்கு சென்ற வீடியோ காட்சிகளுக்கு நெட்டிசன்கள் பரவலான விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர்.நியூயார்க்,


வனவிலங்குகள் பொதுவாக, காட்டில் உள்ள பிற விலங்குகளுடன் சண்டையிட்டு கொள்ளும். இரைக்காகவோ, இது எனது ஏரியா என்று உறுதி செய்வதற்காகவோ இந்த மோதல் நடைபெறும். வீட்டில் வளரும் செல்ல பிராணிகளும் சில சமயங்களில் ஒன்றுடன் ஒன்று விளையாட்டாக மோதி கொள்ளும்.

இவற்றில் நாய் மற்றும் பூனை விதிவிலக்கல்ல. ஆனால், உருவத்தில் பெரிய, வேட்டையாடி வாழ கூடிய தன்மை கொண்ட வரிப்புலி ஒன்றுடன் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணியான கோல்டன் ரிட்ரீவர் வகையை சேர்ந்த நாய் ஒன்று வம்பு சண்டைக்கு சென்ற காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

அனிமல்ஸ் பவர் என்ற பெயரிலான இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றில் வெளிவந்த இந்த வீடியோவில் சிங்கம் ஒன்று அமர்ந்து இருக்கிறது. அதன் முன்னே அதனை பார்த்தபடி வரிப்புலி ஒன்று அமர்ந்திருக்கிறது. அதனருகே ரிட்ரீவர் வகை நாய் ஒன்று செல்கிறது.

திடீரென புலியின் காது ஒன்றை நாய் வாயில் கவ்வி கொள்கிறது. அதனை விடாமல் நாய் பிடித்து இழுக்கிறது. அதுவரை பொறுமையாக இருந்த புலி சற்று நேரத்தில் வலி பொறுக்காமல் நாயை தனது முன்னங்கால்களை கொண்டு அடிக்க பாய்கிறது. எனினும், தனது பிடியை நாய் விடாமல் இழுக்கிறது.

இந்த வீடியோவை 4.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு உள்ளனர். 18 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் லைக் செய்துள்ளனர்.

இதுபற்றி விமர்சகர் ஒருவர், நாய்க்கு ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளது. அதனால் வந்த வாய்ப்பினை விடாமல் பிடித்து கொண்டது. ஆனால், பிடியை விட்ட தருணம், அது முடிந்து விடும் என தெரிவித்து உள்ளார். இந்த வீடியோ காட்சியை கண்ட மற்றொருவர், எனது மனைவி அதிரடியில் இறங்கி விட்டாள் என தெரிவித்து உள்ளார்.Next Story