கொரோனாவை விட கொடிய நோய்த்தொற்று உருவாகக்கூடும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.!


கொரோனாவை விட கொடிய நோய்த்தொற்று உருவாகக்கூடும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.!
x

கொரோனாவை விட கொடிய நோய்த்தொற்று உருவாகக்கூடுமென உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெனீவா,

கடந்த 2019ம் ஆண்டு உருவான கொரோனா நோய்த்தொற்று உலகில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தடுப்பூசி மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றால், தற்போது உலகம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனை தொடர்ந்து கொரோனா பெருந்தொற்றை உலக சுகாதார அவசரநிலையில் இருந்து நீக்குவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், கொரோனாவை விட கொடிய நோய்த்தொற்று விரைவில் உருவாகும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டிட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார மாநாட்டில் பேசிய அவர், கொரோனா பெருந்தொற்று உலக சுகாதார அவசர நிலையில் இருந்துதான் நீக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்னமும் மனித குலத்துக்கான அச்சுறுத்தல் என்ற நிலையில் இருந்து அது நீக்கப்படவில்லை. என்றார்.

மேலும், கொரோனாவை விட கொடிய நோய்த்தொற்று விரைவில் உருவாகக்கூடும் என்று கூறிய அவர், அதனை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story