டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலியை விரைவில் அறிமுகப்படுத்த முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி திட்டம்!


டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலியை விரைவில் அறிமுகப்படுத்த முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி திட்டம்!
x
தினத்தந்தி 29 Oct 2022 8:21 AM GMT (Updated: 29 Oct 2022 8:22 AM GMT)

விரைவில் 'புளூஸ்கை' என்ற சமூக வலைதளத்தை அறிமுகப்படுத்த ஜாக் டோர்சி தீவிரமாக களமிறங்கியுள்ளார்.

வாஷிங்டன்,

டுவிட்டரின் முன்னாள் சி இ ஓ ஜாக் டோர்சி டுவிட்டருக்கு போட்டியாக புதிதாக ஒரு சமூக வலைதளம் மற்றும் அதற்கான செயலியை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்.

டுவிட்டரின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஜாக் டோர்சி 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செய்ததார். இந்த ஆண்டு மே மாதம் அந்நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்தும் விலகினார்.

இதனை தொடர்ந்து டோர்சி, டுவிட்டரில் நிலவும் சில விஷயங்கள் குறித்து வருத்தம் தெரிவித்திருந்தார். மேலும், இன்றைய உலகில் சமூக ஊடகங்களின் தற்போதைய பிரச்சனைகளை தீர்க்க தயாராக உள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில், புதிதாக 'புளூஸ்கை' என்ற பெயரில் ஒரு சமூக வலைதளத்தை விரைவில் அறிமுகப்படுத்த தீவிரமாக களமிறங்கியுள்ளார். அந்த செயலியின் பீட்டா வெர்ஷன் இப்போது பயன்பாட்டுக்கு வந்து உள்ளது.முன்னதாக, டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜாக் டோர்சி இருந்தபோது, 'புளூஸ்கை' என்ற பெயரில் ஒரு சமூக வலைதளம் 2019இல் டுவிட்டரால் நிறுவப்பட்டது.

இது குறித்து அந்நிறுவனம் கூறுகையில், புளூஸ்கை ஒரு கூட்டமைப்பான சமூக வலைத்தள செயலியாக உள்ளது. வழக்கமாக ஒரே தளத்தில் இயக்கப்படுவதற்கு பதிலாக இது பல தளங்களால் இயக்கப்படுகிறது. எந்தவொரு நிறுவனமும் அதைப் பயன்படுத்தும் நபர்களின் தரவை சொந்தமாக்க முயற்சிக்கிறதோ அவற்றிற்கு போட்டியாக புளூஸ்கை இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

பயனர்களின் தரவுகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, அவர்கள் அதனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் இந்த செயலி செயல் வடிவம் கொண்டு தயாராகி வருகிறது. பயனர் தரவை மீட்டெடுக்க முடியும். விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story