எத்தியோப்பியாவில் வான்வழித் தாக்குதல்: 26 பேர் உயிரிழப்பு.!


எத்தியோப்பியாவில் வான்வழித் தாக்குதல்: 26 பேர் உயிரிழப்பு.!
x
தினத்தந்தி 14 Aug 2023 11:27 PM GMT (Updated: 15 Aug 2023 7:25 AM GMT)

எத்தியோப்பியாவில் நடைபெற்ற வான்வழி தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.

அம்ஹாரா,

எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் நடைபெற்ற வான்வழி தாக்குதலில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எத்தியோப்பியாவில் ராணுவம் மற்றும் உள்ளூர் போராளிகளுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது டிரோன் தாக்குதல் என்று குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமைச் சட்டங்களை மீறுவதாகக் கூறப்படும் அனைத்து மோதல் சம்பவங்களையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.


Next Story