அமெரிக்கா: தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி மீது ரெயில் மோதல்- 16 பேர் படுகாயம்


அமெரிக்கா: தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி மீது ரெயில் மோதல்- 16 பேர் படுகாயம்
x

விபத்தில் படுகாயம் அடைந்த 16 பேர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சியாட்டிலுக்கு பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்த ரெயில் செல்லும் பாதையில் உள்ள மூர் பூங்கா அருகே தண்ணீர் லாரி ஒன்று தண்டவாளத்தை கடக்க முற்பட்டது. அப்போது அந்த லாரி மீது ரெயில் மோதி தடம் புரண்டது.

இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் படுகாயம் அடைந்த 16 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.


Next Story