மத்திய துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.3ஆக பதிவு


மத்திய துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.3ஆக பதிவு
x
தினத்தந்தி 7 Feb 2023 11:20 AM GMT (Updated: 7 Feb 2023 11:26 AM GMT)

துருக்கியில் கடந்த 2 நாட்களில் 6-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

அங்காரா,

துருக்கியில் கடந்த 2 நாட்களாக ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கங்கள் அந்த நாட்டை முழுவதுமாக முடக்கி போட்டுள்ளது. துருக்கியின் காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன.

துருக்கி நிலநடுக்கம் காரணமாக இதுவரை சுமார் 6 ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. அந்த இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், உயிர் தப்பியவர்கள் தங்கள் குடும்பத்தினரை தேடி அலையும் காட்சிகள் மனதை பதைபதைக்கச் செய்கின்றன.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், மத்திய துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகி உள்ளது. துருக்கியில் இன்று 3-வது முறையும், கடந்த 2 நாட்களில் 6-வது முறையும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story