தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் துப்பாக்கிச்சூடு: குழந்தைகள் உட்பட 31 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!


தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் துப்பாக்கிச்சூடு: குழந்தைகள் உட்பட 31 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
x
தினத்தந்தி 6 Oct 2022 8:29 AM GMT (Updated: 2022-10-06T13:59:48+05:30)

குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள், பெரியவர்கள் என 31 பேர் பலியாகினர்.

பேங்காக்,

தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 31 பேர் பலியாகினர்.

குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என 31 பேர் பலியாகினர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பிஞ்சு குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். அந்த நபர் முன்னாள் போலீஸ் அதிகாரி என்பது விசரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை உடனடியக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து துறைகளையும் தாய்லாந்து பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.


Next Story