தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால்.. உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் போல தவறானதாக அமையும் - அமெரிக்கா


தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால்.. உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் போல தவறானதாக அமையும் - அமெரிக்கா
x

தைவான் மீதான தாக்குதல், உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு போல சீனாவுக்கு தவறானதாக அமையும்.

வாஷிங்டன்,

தைவான் மீதான தாக்குதல், உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு போல சீனாவுக்கு தவறானதாக அமையும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மில்லி தெரிவித்தார். ஜெனரல் மில்லி செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதாவது:-

"தைவானின் பெரும்பகுதி மலைப்பாங்கான தீவு. ஆகவே தைவான் ஜலசந்தியின் குறுக்கே தைவானைத் தாக்குவதும் முற்றுகையிடுவதும் கடினமான பணியாகும். இது மிகவும் கடினமான ராணுவ நோக்கம். மேலும், சீனர்களுக்கு அதிக ஆபத்தும் இருக்கும்.

தைவான் மீதான தாக்குதல் ஒரு புவிசார் அரசியல் பிழையாக இருக்கும். புதின் உக்ரைனில் செய்ததைப் போன்று, அது ஒரு மூலோபாய தவறாக இருக்கும்" என்று ஜெனரல் மில்லி கூறினார்.


Next Story