ஆஸ்திரேலியாவில் ரூ.533 கோடியில் அமைய உள்ள ஹைட்ரஜன் மையம்


ஆஸ்திரேலியாவில் ரூ.533 கோடியில் அமைய உள்ள ஹைட்ரஜன் மையம்
x

கோப்புப்படம்

தெற்கு ஆஸ்திரேலியாவில் ரூ.533 கோடியில் ஹைட்ரஜன் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கான்பெரா,

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க உலக நாடுகள் பலவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறி வருகின்றன. அந்தவகையில் தெற்கு ஆஸ்திரேலியாவின் வையல்லா பகுதியில் புதிய ஹைட்ரஜன் மையம் அமைக்க அந்த நாட்டின் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக சுமார் ரூ.533 கோடி ஒதுக்குவதாக அந்த நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் 2030-க்குள் ஆண்டுதோறும் 18 லட்சம் டன் ஹைட்ரஜன் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `நாட்டை வல்லரசாக மாற்றும் முயற்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும். மேலும் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பினை வழங்கி அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story