ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்கா ஆதரவு


ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்கா ஆதரவு
x

கோப்புப்படம்

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், அந்த நாட்டின் ஜனாதிபதியான ஜோ பைடன் நேற்று முன்தினம் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்கச்செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தியாவுடன் ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், "இன்றைய உலகின் தேவைகளுக்கு சிறப்பாக பதிலளிக்கிற வகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்னும் கூடுதல் உறுப்பினர்களை உள்ளடக்கியதாக அமைவதற்கான நேரம் வந்து விட்டது என்று நம்புகிறேன்" என கூறினார்.

இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் பதில் அளிக்கையில், "ஜெர்மனி, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் வரலாற்று ரீதியாகவும், தொடர்ந்தும் ஆதரிக்கிறோம். அதே நேரத்தில் இதற்காக நிறைய பணிகள் செய்து முடிக்கப்பட வேண்டும்" என தெரிவித்தார்.


Next Story