இந்தியாவின் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு பில்கேட்ஸ் பாராட்டு


இந்தியாவின் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு பில்கேட்ஸ் பாராட்டு
x

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி இயக்கத்திற்கு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பேர்ன்,

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள தாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்ற நிகழ்வில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா பங்கேற்றார். அங்கு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்சை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தை பில்கேட்ஸ் வெகுவாக பாராட்டியுள்ளார்.

மன்சுக் மாண்டவியாவை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி என்றும், இந்தியாவின் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான தடுப்பூசி இயக்கம், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுகாதார விளைவுகளை அளவிடுவதில் இந்தியாவின் வெற்றி ஆகியவை உலகிற்கு பல படிப்பினைகளை வழங்குகிறது என்றும் பில்கேட்ஸ் தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.

பில்கேட்ஸ் உடனான சந்திப்பு குறித்து தமது டுவிட்டரில் பகிர்ந்துள்ள மாண்டவியா, டிஜிட்டல் வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், நோய் கட்டுப்பாடு மேலாண்மை, மலிவு மற்றும் தரமான நோயறிதல் முறை மற்றும் மருத்துவ சாதனங்களின் மேம்பாட்டை வலுப்படுத்துதல் உள்பட சுகாதாரப் பாதுகாப்பு தொடரபாக நாங்கள் விவாதித்தோம் என்று கூறியுள்ளார்.


Next Story