பாகிஸ்தானில் மத நிந்தனை குற்றச்சாட்டு; கிறிஸ்தவ வாலிபருக்கு மரண தண்டனை: கோர்ட்டு உத்தரவு


பாகிஸ்தானில் மத நிந்தனை குற்றச்சாட்டு; கிறிஸ்தவ வாலிபருக்கு மரண தண்டனை: கோர்ட்டு உத்தரவு
x

பாகிஸ்தானில் மத நிந்தனை குற்றச்சாட்டில் கிறிஸ்தவ வாலிபருக்கு அந்நாட்டு கோர்ட்டு மரண தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.

லாகூர்,

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள பகவல்பூர் நகரில் இஸ்லாமி காலனியில் வசித்து வருபவர் நாவ்மன் மசீ (வயது 19). அவர், தகவல் செயலி ஒன்றில் மத நிந்தனை விசயங்களை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பகிர்ந்து உள்ளார் என புகார் எழுந்தது.

அதனடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அதில், நாவ்மனுக்கு எதிரான சான்றுகள் மற்றும் சாட்சியங்கள் ஆகியவற்றை கோர்ட்டில் வழக்கறிஞர் சமர்ப்பித்தனர்.

அவரது மொபைல் போனின் தடய அறிவியல் பதிவும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. விசாரணை முடிவில், அந்த வாலிபருக்கு மரண தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.

அந்த நாட்டில் நிரூபிக்கப்படாத இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் கும்பல்கள் கலகத்தில் ஈடுபடுவது காணப்படுகிறது. சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பே, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் கும்பலால் கொல்லப்படும் பல்வேறு சம்பவங்களும் நடந்து உள்ளன.


Next Story