கிரிமியாவில் உள்ள ரஷிய ராணுவ விமான தளத்தில் பயங்கர வெடிவிபத்து!


கிரிமியாவில் உள்ள ரஷிய ராணுவ விமான தளத்தில் பயங்கர வெடிவிபத்து!
x

Image Credit:Reuters

ரஷியாவுடன் இணைந்த கிரிமியாவில் உள்ள ராணுவ விமான தளத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.

மாஸ்கோ,

ரஷியாவுடன் இணைந்த கிரிமியாவில் உள்ள ராணுவ விமான தளத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.

உக்ரைனின் தெற்கில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்த, சாகி ராணுவ விமான தளம் ரஷியாவால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு நிலைகொண்டிருந்த ரஷிய போர் விமானங்கள் இன்று தீக்கிரையாகின.

அங்கு வெடிகுண்டுகள் வெடித்ததால் ராணுவ விமான தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் புகை சூழ்ந்து காணப்பட்டது.

ஆனால் அங்கிருந்த போர் விமானங்களுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனினும் அங்கு ஏராளமான ஆம்புலன்சுகள் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணுவ விமான தளத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் (சுமார் மூன்று மைல்) சுற்றளவில் அதிகாரிகள் அந்த பகுதியை சீல் வைத்தனர்.

உக்ரேனிலிருந்து நீண்ட தூர ஏவுகணைகள் அதன் மீது ஏவப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் அதை உக்ரைன் தரப்பு உறுதிபடுத்தவில்லை. ரஷிய தரப்பும் அவ்வாறான செய்திகளை மறுத்துள்ளது.

1 More update

Next Story