சந்திரயான்-3 வெற்றியை பாராட்டிய பாகிஸ்தான் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள்...!!!


சந்திரயான்-3 வெற்றியை பாராட்டிய பாகிஸ்தான் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள்...!!!
x

சந்திரயான்-3 வெற்றியை பாகிஸ்தான் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் வெகுவாக பாராட்டி உள்ளனர்.

கராச்சி,

இந்தியா, கடந்த 23-ந் தேதி நிலவின் தென்துருவத்தில் இறங்கி வரலாறு படைத்தது. இதன்மூலம் உலக நாடுகளின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது. தற்போது இந்தியாவின் சந்திரயான்-3 சாதனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹுமா அமீர் ஷா மற்றும் அப்துல்லா சுல்தான் ஆகிய இரு தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், சந்திரயான்-3 வெற்றியை வெகுவாக பாராட்டி உள்ளனர். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதுகுறித்து பேசிய அவர்கள், " இந்தியா நிலாவிற்கு சென்று சாதித்துள்ள அதே வேளையில் நாம் இங்கு மாட்டிக் கொண்டுள்ளோம். நாம் நமக்குள்ளேயே பரபரப்பாக சண்டையிட்டு கொண்டிருக்கிறோம். இங்கிருந்து சந்திரயான்-3 வெற்றியைப் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது." என்றனர்.

இது சம்பந்தமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Next Story