செர்பியாவில் 100 பள்ளிக்கூடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு


செர்பியாவில் 100 பள்ளிக்கூடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு
x

செர்பியாவில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெல்கிரேட்,

செர்பியாவின் பெல்கிரேடில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் கடந்த 3-ந்தேதி 13 வயது பள்ளி மாணவன் தன் சக மாணவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் 8 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த பயங்கர சம்பவம் அரங்கேறிய மறுநாளே தென்பெல்கிரேடில் நடந்த மற்றொரு துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் செர்பியாவை அதிரவைத்தது.

இந்தநிலையில் செர்பியாவில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 78 தொடக்கப்பள்ளிகள், 37 உயர்நிலை பள்ளிக்கூடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக அந்நாட்டு கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதைதொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பள்ளி கூடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.


Next Story