நைஜீரியாவில் லாரி மீது பஸ் மோதி 20 பேர் உயிரிழப்பு


நைஜீரியாவில் லாரி மீது பஸ் மோதி 20 பேர் உயிரிழப்பு
x

கோப்புப்படம்

நைஜீரியாவில் லாரி மீது பஸ் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

அபுஜா,

நைஜீரியாவின் தென்மேற்கு மாகாணமான லாகோஸ்-படக்ரி தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. மோவோ நகர் அருகே சென்றபோது அதன் முன்னால் சென்ற மணல் லாரியை பஸ் முந்த முயன்றது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் நிலைதடுமாறி லாரி மீது மோதியது.

இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1 More update

Next Story