இந்திய மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கனடா அரசு

இந்திய மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கனடா அரசு
x

கனடாவில் பயிலும் இந்திய மாணவர்களை வெளியேற்றும் விவகாரத்தில், மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென, மத்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

புதுடெல்லி,

கனடாவில் பயிலும் இந்திய மாணவர்களை வெளியேற்றும் விவகாரத்தில், மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென, மத்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மோசடியான ஆவணங்களைத் தயாரித்து இந்திய மாணவர்கள் சிலர், கனடா நாட்டின் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. அவ்வாறு சேர்ந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையில் கனடா அரசு ஈடுபட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், டெல்லியில் உள்ள கனடா நாட்டின் தூதரகம் மற்றும் கனடாவில் உள்ள இந்திய நாட்டு தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக, கனடா நாட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story