சீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சி: பின்னணி என்ன?


சீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சி: பின்னணி என்ன?
x

Image Courtacy: AFP

சீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

பீஜிங்,

சீனாவில் ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் பொருளாதாரம் 0.4 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

அந்த நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் தடுப்பதற்காக ஷாங்காய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொதுமுடக்கத்தை நீண்ட காலம் அமல்படுத்தி இருந்தனர். நீண்டதொரு பொது முடக்கத்துக்கு பின்னர் கடந்த மே மாதம்தான் மீண்டும் தொழில் நிறுவனங்கள் செயல்பட தொடங்கி உள்ளன. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகிறபோது, தொழில் நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு நிலையான மீட்பு நடந்து வருவதாக சீனா கூறியது.

ஆனால் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2.6 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

சீனாவை ஆளும் கம்யூனிஸ்டு கட்சி, வரிகளை திரும்பத்தருவதாகவும், இலவச வாடகை உள்ளிட்ட உதவிகளை வழங்குவதாகவும் உறுதி அளித்துள்ள நிலையில், இந்த ஆண்டு 5.5 சதவீதம் என்ற பொருளாதார இலக்கை அடையத்தவறி விடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.


Next Story